Friday, May 7, 2010

இரு(திரு) மந்திரம் - சிந்திக்க தெரிந்தோர் அனைவருக்கும்

ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் மந்திரத்திற்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். தங்களுக்கு அதன் பொருள் புரிகிறதோ? இல்லையோ ? மிகுந்த கவனத்துடன் அதை உச்சரிப்பார்கள்.

ஆனால் அவர்களுடன் சேர்த்து பகுத்தறிவுவாதிகளுக்கும் மற்றும் யோசிக்க தெரிந்த , பொதுவில் பிறருடன் communicate செய்ய தெரிந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் இரண்டு இருக்கின்றது . நமக்கு day to day life ல் உள்ள அத்தனை கஷ்டத்தையும் போக்க கூடிய அந்த இரண்டு மந்திரங்களை பிறருடைய preaching இல்லாமல் நாமே பழகலாம்.

அதை நாம் அனைவரும் இயல்பாகவே அறிந்திருக்கிறோம் . ஆனால் நாம் அதை சொல்வதை விட பிறர் நமக்கு சொன்னால் சந்தோஷம் அடைவோம்.

அந்த இரு மந்திரங்களானவை

1. Thanks
2. Sorry

இதன் சக்தியை நம்மில் பெரும்பாலானவர்கள் check செய்து பார்ப்பதில்லை.


எந்த ஒரு செயலையும் நமக்காக பிறர் செய்வது நமக்கு பிடித்தமானதாக ஆகிறது.
சில நேரங்களில் நம்மால் செய்ய முடியாதவைகளை பிறர் நமக்காக செய்யும்போது நமக்கு அந்த செயலை செய்பவர் மீது மரியாதை ஏற்படுகிறது.

அதன் வெளிப்பாடாக Thanks என்ற ஒரு சிறிய சொல்லை கூறினால் அதனால் மற்றவர்க்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நாம் மரியாதை தருபவர்களுக்கு மட்டுமே இவற்றை பயன் படுத்துவதை பழக்கமாக வைத்திருக்கிறோம்.

Majority of us are reluctant to chant these mantras during the below mentioned occasions.


நம்மை விட வயதிலோ, அந்தஸ்திலோ, பதவியிலோ , தகுதியிலோ குறைவாக உள்ள நமக்கு சொந்தம் இல்லாதவர்கள் செய்யும் உதவியை நாம் take it granted ஆக எடுத்துக்கொள்கிறோம்.

அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதை கௌரவ குறைச்சலாக எண்ணுகிறோம்.

அதே போல் மேலே சொல்லப்பட்ட list ல் உள்ளவர்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த செயலால் ஏதாவது குறை ஏற்பட்டால் அதற்கு மிக சக்தி வாய்ந்த அந்த இரண்டாவது மந்திரமான Sorry என்பதை சொல்ல தயங்குகிறோம்.

நமக்கு இயல்பாகவே சொல்ல தோன்றும் சமயங்களோடு மேலே குறிப்பிட்ட தருணங்களிலும் வேறு எதையும் compare செய்யாது முதலில் உதட்டளவிலும் நாள் செல்ல செல்ல மனதளவிலும் சொல்ல ஆரம்பித்து விட்டோம் என்றால் அந்த மந்திரங்களின் பலன் நமக்கு கிடைக்க துவங்கும்.

முதல் பயனாக நம்முடைய தான் என்ற அகந்த சிறிது குறையும்.Its reduction in EGO level and not in self confidence.

அடுத்து நம்முடன் நெருங்கும் friend's circle expand ஆகும்.

நாம் பிறரை மதிக்க தொடங்குவதால் நம் மீதே நமக்கு மதிப்பு உயரும். இது நாளடைவில் நமது potential and productivity ஐ உயர்த்தும்.

இவ்வாறாக நமது வாழ்கையில் நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றத்தை தரக் கூடிய
இந்த இரு(திரு)மந்திரங்களை இது நாள் வரையிலும் பயன் படுத்தாவிட்டாலும் இனியாவது பயன் படுத்த முயல்வோமா ?

உச்சரிப்போம் உயர்வோம்.

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்