சிந்திக்கத் தெரிந்த உயிரினமாக , மனிதராய் பிறந்த யாவரும் ஒவ்வொரு நாளும் பிற மனிதர்களோடு உறவு, நட்பு, அலுவல்,பயணம் என ஏதாவது ஒன்றின் மூலம் இணைகிறோம். அவர்களது சொல், செயல் முதலியவை நமக்குள் ஒரு தாக்கத்தை (Impact) ஏற்படுத்துகிறது. அவை சில நேரங்களில் மன நிறைவை தருவதாகவும் ,சில நேரங்களில் மன உளைச்சலை தருவதாகவும் அமைகிறது.
இனிமையான சமயங்களில் நமது மனம் எதையும் பொருட்படுத்தாது இருக்கும்.
ஆனால் ஒரு விவாதத்தின் போதோ அல்லது உணர்வுபூர்வமான நெருக்கடியின்போதோ (argument or emotional harrasment), முடிவு நமக்கு விருப்பமில்லாததாக அமையும் போது அந்த சிறிது நேர தோல்வியையோ, கிண்டலையோ தாங்க முடியாமல் நமது மனமானது தனிமையை நாடும்.
கண்ணீர் என்னும் வடிகால் (Outlet) கிடைத்து விட்டால் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
ஆனால் நமது சமூக அந்தஸ்தினாலோ, பதவியினாலோ(Social Status or Posting) நம்மால் கண்ணீரில் நமது கவலையை கரைக்க முடியாத போது , தனிமை என்னும் ஒரு வலி நிவாரணியை (Pain Killer ) நமது மனம் நாடுகிறது. நாம் நம்மை ஒரு தீவாக (Island - feeling like isolated) நினைத்து சுய இரக்கம் ( Self Pity) என்னும் சுகத்தை விரும்புகிறோம். இதனால் நமது மன வருத்தத்திற்கு காரணம் என்ன? அதை எவ்வாறு வருங்காலத்தில் எதிர் கொள்வது என யோசிக்க மறுக்கிறோம்.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் எல்லோருக்கும் நல்லது தானே நினைக்கிறேன்?" என வருத்தப்பட்டு பின்னர் "இனிமேல் யாரோடும் அதிகம் பழகக்கூடாது " என ஓர் உறுதியுடன் நாம் இனி ஒரு" தீவு " தான் என முடிவு செய்கிறோம்.
இத்தகைய முடிவு நம்மால் தொடர்ந்து பின்பற்ற முடியாமல் போகிறது. ஏன் என்றால் நாம் ஒரு Social Animal. மறுபடியும் சில காலங்களில் முன்பு எற்பட்டதைபோன்று ஒரு சூழ்நிலையில் மீண்டும் தீவாக இருப்போம் என முடிவு செய்கிறோம்.
தீவு என்ற நிலை கொண்டு காரணத்தை ஆராய்வதை தவிர்ப்பதை விட விடுபட்ட ஓர் எழுத்தான "ர்" சேர்த்து "தீர்வு" எது என்று யோசித்தோமானால் எந்த சூழ்நிலையும் நம்மை வலு இழக்க செய்யாது.
ஆகவே விடுபட்ட ஓர் எழுத்தான "ர்" சேர்த்து "தீவு" என்பதை "தீர்வு" என மாற்றி கவலையை வெல்வோம்.
என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்
குறிப்பு: தீர்வு எது என்பதை எங்கு தேடுவது. சற்றே கீழ் நோக்கி பாருங்கள் விடை " தேடுங்கள் தாழ்பாளை" என்ற blog ல் இருக்கிறது.
Sunday, August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
True..you have written a very practical thing..the way you explained "i" understood..
Post a Comment