Wednesday, September 29, 2010

மாசில்லா மதிப்பீடுகள்


ஒவ்வொரு விடியலும் பெரும்பாலும் நமது சொந்த பந்தங்களுடன் தொடங்குகிறது. நாளின் போக்கில் நமது நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் புதியவர்கள் ஆகியவர்களுடன் பழகும் வாய்ப்பினை பெறுகிறோம்.

பெரும்பாலும் புத்துணர்வுடனே நமது அன்றாட செயல்கள் தொடங்குகிறது. நமக்கு நெருக்கமானவர்களின் சிறு அசைவும் , புதியவர்கள் மற்றும் நெருக்கமில்லாதவர்களின் குறிப்பிட்ட சில செயல்களும் நமது மன நிலையை மாற்ற வல்லதாக இருக்கிறது.

ஒரு இனிமையான சந்திப்பினை தொடர்ந்து ,official ஆகவோ அல்லது personal ஆகவோ ஒரு கோபப்ப்படும்படியான சூழ்நிலை ஏற்பட்டால் நாம் நமது இனிமையான மன நிலையை உடனடியாக கடுமையாக மாற்றிக்கொண்டு அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்கிறோம்.

ஆனால் கடுமையிலிருந்து இனிமைக்கு மாற உடனடியாக நமது மனம் மறுக்கிறது.

மேலும் ஒருவரின் செயலால் நமக்கு ஏற்படும் வெறுப்பை , அடுத்து நம்மை சந்திப்பவர் மீதும் , அவர்கள் எவ்விதத்திலும் சம்பந்த படாத போதும் பெரும்பாலோர் வெளிப்படுத்துகிறோம்.


ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் மதிப்பீடு செய்ய தவறுவதில்லை.

ஒவ்வொருவரும் தம்மை எப்பொழுதும் ஒரு மதிப்பீட்டாளராகவே எண்ணி கொள்கிறோம்.

எனது அனுபவத்தில் , என்னுடைய well wisher ஒருவரிடமிருந்து நான் கற்ற மிக பெரிய மிக முக்கியமான பாடம் என்னவென்றால்

அவரது பொறுமையை சோதிக்கும் படியான நிகழ்சிகள் பிறரால் நடந்தாலும் உடனடியாக ,நானோ வேறு யாரோ அவரை சந்திக்க வேண்டி வந்தால் , புது மனநிலையுடன் ,பழைய உணர்ச்சிகளை carry forward செய்யாமல் , புத்துணர்வுடன் , நமக்கான குறிப்பறிந்து இயல்பாக பதிலளிப்பார் .

இது பிறரில் காணமுடியாததால் நான் வியக்கும் விஷயம் ஆகிறது .

மேலும் அவரது சுமை நிறைந்த, பொறுப்பு மிகுந்த ,high pressure working environmentல் இது எப்படி சாத்தியமாகிறது என நான் வியந்த காலங்கள் பல.

ஒரு நல்ல ஆசிரியர் பரீட்சை விடை தாள்களை திருத்தும்போது எவ்வாறு ஒவ்வொரு விடைத்தாளையும் முந்தைய விடைத்தாளின் பாதிப்பில்லாது புது கவனத்துடன் திருத்துகிராரோ , அத்தகைய மன நிலையை அவரிடம் காண்கிறேன்.

பெரும்பான்மையான மன விரிசல்கள் , நாம் நம்மை அறியாமல் உணர்ச்சி வசத்தில் உதிர்க்கும் சிறு சிறு வார்தைகளினாலேயே உருவாகிறது.



ஆகவே நம்மை சந்திக்கும் ஒவ்வொருவரையும் முழு கவனத்துடன் ஒரு புது விடைதாளாக கருதி , எவ்வித prejudice இல்லாமல் அணுகினோமேயானால் , உறவுகள் மேம்பாட்டில் எந்தவித முரண்பாடுகளும் ,நமது மதிப்பீடுகள் தவறாவதற்கும் வாய்ப்பில்லை.

நான் எனது உதாரண புருஷரிடம் கற்றதை practice செய்து பலன் காண்கிறேன்.

நீங்களும் முயன்று பாருங்களேன்.

என்றும் அன்புடன்
கே.டி.எஸ்.முகுந்தன்
9884087424



2 comments:

Unknown said...

You are awesome in analyzing practical issue..again.. :)

Mugundan | முகுந்தன் said...

உங்கள் பார்வை பயனுள்ளது.

வாழ்க்கையின் பாடங்கள் அடுத்த மனிதரிடம் தான்
பெரும்பாலும் பெறுகிறோம்.

Post a Comment