நம்மில் பெரும்பாலானோருக்கு நமது பெயரே உலகில் இனிய சொல் ஆகும். விரும்புகிறோமோ, இல்லையோ நம்மை பற்றி வரும் கணிப்புகள் நமக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். ஒரு சிறு குழந்தை கூட தன்னுடைய சிறு அசைவிற்கு சுற்றியுள்ளோரிடத்தில் ஏற்படும் reaction- ஐ உன்னிப்பாக கவனிக்கிறது. நாமும் நம்முடைய செயல்பாடுகளுக்கு உரிய மதிப்பெண்களை அறிய ஆவலாய் இருப்போம்.
நமது செயல்கள் பாராட்டப்படும்போது எந்த அளவு மகிழ்ச்சி அடைகிறோமோ அதே அளவு கோபம் நம்மை பற்றிய விமர்சனங்கள் வரும்போது ஏற்படுகிறது. இத்தகைய உணர்ச்சி மிகவும் நியாயமானதே.
ஆனால்
நம்மை பற்றிய மதிப்புரைகள் யாரிடத்திலிருந்து வருகின்றன என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாம் மேற்கொண்ட முயற்சிகளை பற்றி அறியாதோர், நமது செயல்பாட்டில் உதவாதோர், கண்மூடித்தனமாக விமர்சிப்போர் ஆகிய வகையினரின் விமர்சனங்கள் அனைத்தும் ஒதுக்க தக்கவையே.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறள் குறுக்கே வந்தாலும் , அக்குறளின் மெய்பொருள் என்னவெனில் சொல்பவரின் வயது, அந்தஸ்து போன்றவை ஒரு பொருட்டல்ல என்பதே ஆகும்.
சொல்பவரின் மன ஓட்டம் இதில் உட்படாது.
விமர்சனங்கள் செய்பவர் உண்மையான அக்கறையுடன் நமது நலனை கருத்தில் கொண்டு உரைப்பாராயின் அவர் யாராக இருந்தாலும் அவ்விமர்சனத்தை கவனித்தல் அவசியம்.
மேற்கூறிய படி அக்கறை இல்லாதோர் செய்யும் விமர்சனங்கள் எக்காலத்திலும் ஒதுக்க தக்கதே.
ஒரு தரமான தராசால் மட்டுமே துல்லியமான அளவீட்டினை தர இயலும்.
ஆகவே
விமர்சனங்களை மதியுங்கள் அவை தரமான தராசினால் வழங்கப்பட்டால் மட்டும்.
என்றும் அன்புடன்
கே. ட்டி. எஸ் .முகுந்தன்
9884087424
Friday, December 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment