அதிகமான சமயங்களில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?
உலகில் நம்மைத்தவிர அனைவரும் நலமாக இருப்பதாகவும் நாம் மட்டும் அனைத்து துன்பங்களையும் ஒரு சேர அனுபவிப்பது போலவும் பெரும்பான்மையானோர் எண்ணிக்கொள்கிறோம் .
அவை பொதுவாக கீழ்காணும் சில சந்தர்பங்களின் போது நமக்கு தோன்றும்.
1. நமக்கு நெருக்கமானவர் அகால மரணம் அடையும் போது.
2. நாம் பெரிதும் நேசிக்கும் நண்பர்கள் காரணம் கூறாது விலகி செல்லும் போது
3.நமது சக அலுவலர் நம்மை விட மதிக்கப்படும் போது
4.குடும்ப விழாக்களில் நாம் புறக்கணிக்கப்படும்போது
5.நமது திறமை அங்கீகரிக்கபடாத போது
6.நமது உண்மையான அன்பை மற்றவர் exploit செய்யும் போது.
இவை அனைத்தும் நமக்கு கவலை அளிக்கும் சம்பவங்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இவற்றின் தாக்கம் நீடிக்காத போதும் ,நம்மில் பெரும்பாலானோர் தன்னிலை இழந்து , தமது அதிருப்தியை சொல்லிலும் , செயலிலும் நம்மை சுற்றி இருப்பவர் மீது செலுத்த தவறுவதில்லை.
இருந்தபோதும் இவை மட்டுமே நமது துன்பத்திற்கும் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?" என்ற கேள்விக்கும் காரணமாய் இருந்தால் ,
நமது கவலைகள் அர்த்தமற்றவை.
தலைப்பில் காணும் "குறையொன்றுமில்லை" என்பதே நமது வாழ்க்கைக்கு பொருத்தமானதாகும் .
ஏனெனில்
இவைகளே துன்பத்தின் விளிம்பு என்றால் கீழ்காண்பவற்றை என்னவென்று சொல்வது.
1.சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடியினர், டெல்லி மாணவி முதற்கொண்டு நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளின் வாழ்விலும் ஏற்பட்ட நிலை .
2.தங்களுக்கு சம்பந்தம் இல்லாத போதும் போர் மற்றும் தீவிரவாதத்தால் உடற்குறை அடைந்தோர் மற்றும் பெற்றோரை இழந்த சிறார்களின் நிலை.
3.வசதியற்றோருக்கு ஏற்படும் விலை உயர்ந்த நோய்கள்
இவர்களது நிலைக்கு இவர்கள் காரணமில்லை என்பதும் , இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு "ஈடு செய்ய முடியாதது " (Irreparable Loss ) என்பதும் கசப்பான உண்மை ஆகும்
ஆனாலும் இத்தகைய நிலைக்கு ஆளாவோர் கூட எதிர்த்து , போராடி, சுய இரக்கதிலிருந்து மீண்டு , வாழ்கையை புதிய கோணத்தில் பார்த்து தாமும் தமது வாழ்கையில் " குறையொன்றுமில்லை" என உரத்து சொல்ல முயற்ச்சிக்கும் போது ,
கிடைப்பதற்கு அரிய , சிந்திக்க தெரிந்த மானிட பிறவியை பெற்றுள்ள நாம், வெறும் அற்ப காரணங்களுக்காக தன்னிரக்கத்தில் சிக்கி , உலகிலேயே பெரும் துன்பம் நமக்கு உள்ளது என எண்ணுவது slow poison உண்பதற்கு ஒப்பாகும்.
அதை விடுத்து நாம் நம் potential உணர்ந்து , தன்னிரக்கத்தில் இருந்து விடுபட்டால், நாம் நமக்கு மட்டுமல்ல , உண்மையாக பாதிக்கப்பட்டோருக்கும் உதவிகரமாக இருப்போம். .
" குறையொன்றுமில்லை " என்பதுதான் குறை என மகிழ்வுடன் சொல்வோம்.
அன்பன்
K.T.S.Mugundan
9884087424
